திங்கள், 3 ஜூன், 2013

அறிவு மழுங்கி போனவர்கள்


லிங்க (ஆண்குறி) வழிபாடு கேள்விப்பட்டு இருக்கோம் இது என்ன பெண் குறி (யோனி )  வழிபாடு !!  http://www.pragyatv.com/kamakhya-devi-assam.aspx    அசாம் மாநிலத்தில் கெளகத்தி ரயில்வே நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் துர்க்கா காமக்யா கோவில் யோனி வழிபாட்டு ஸ்தலம் "யோனிபீடம் " என்றழைக்கப்படுகிறது. இதற்கு சொல்லப்படும் புராணக்கதை.    கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்    அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனிவழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்! சரி கதையை விட்டுத்தள்ளுங்கள்.    இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.    அந்த மூன்று நாட்களும் அக்கோவில் குளத்து நீர் சிவப்பாக மாறிவிடும் அதிசயம் நடக்கும்.! அந்த புண்ணிய நீரை பக்தர்களுக்கு புனித நீராக கொடுப்பார்கள். (கோவில் குளத்தில் கலர்ப்பொடி தூவுகிறார்கள். அதனால் தான் குளத்து நீர் சிவப்பாக மாறுகிறது என்பது தான் உறுதி செய்யப்பட்ட செய்தி)    அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.     அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு. இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான். கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம். சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.    அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!     இக்கோவில்களின் தொடரும் இச்சடங்குகள் இனக்குழு வழிபாட்டின் பெண் வழிபாட்டின் எச்சங்கள் தானே தவிர வேறல்ல, மருத நில வாழ்க்கையில் கேரளாவில் இன்றும் "உக்காரல்" என்ற சடங்கு மிகவும் புகழ்பெற்றது. பெண் பூப்படைவதை கிராமப்புறங்களின் பெண் உட்கார்ந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள்.    தை மாதத்தில் அறுவடைக்குப் பின் அந்தக் கோடையில் மண் தக தகவென சிவப்பாக காட்சி அளிக்கும். அந்த நாட்களை பூமாதேவி உட்கார்ந்துவிட்டாள் என்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் விவசாயம் சார்ந்த எந்த வேலைகளும் நடக்காது. அதிலும் குறிப்பாக விவசாய நிலத்தில் வேலை செய்யும் மக்களே இச்சடங்கை நம்புகிறார்கள். நிலம் அவர்களுக்கான உடமையாக இல்லாத இக்காலத்திலும் இந்த மூன்று நாட்களும் நிலவுடமையாளர்கள் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை.    இக்கோவில்களில் தொடரும் வழிபாட்டின் எச்சங்களும் சில சடங்குகளும் மனித இன வரலாற்றில் பெண் வழிபாட்டின் மிச்சங்களே தவிர வேறல்ல.
லிங்க (ஆண்குறி) வழிபாடு கேள்விப்பட்டு இருக்கோம் இது என்ன பெண் குறி (யோனி ) வழிபாடு !!
http://www.pragyatv.com/kamakhya-devi-assam.aspx

அசாம் மாநிலத்தில் கெளகத்தி ரயில்வே நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் துர்க்கா காமக்யா கோவில் யோனி வழிபாட்டு ஸ்தலம் "யோனிபீடம் " என்றழைக்கப்படுகிறது. இதற்கு சொல்லப்படும் புராணக்கதை.

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்

அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனிவழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்! சரி கதையை விட்டுத்தள்ளுங்கள்.

இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.

அந்த மூன்று நாட்களும் அக்கோவில் குளத்து நீர் சிவப்பாக மாறிவிடும் அதிசயம் நடக்கும்.! அந்த புண்ணிய நீரை பக்தர்களுக்கு புனித நீராக கொடுப்பார்கள். (கோவில் குளத்தில் கலர்ப்பொடி தூவுகிறார்கள். அதனால் தான் குளத்து நீர் சிவப்பாக மாறுகிறது என்பது தான் உறுதி செய்யப்பட்ட செய்தி)

அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும். 

அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு. இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான். கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம். சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.

அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! 

இக்கோவில்களின் தொடரும் இச்சடங்குகள் இனக்குழு வழிபாட்டின் பெண் வழிபாட்டின் எச்சங்கள் தானே தவிர வேறல்ல, மருத நில வாழ்க்கையில் கேரளாவில் இன்றும் "உக்காரல்" என்ற சடங்கு மிகவும் புகழ்பெற்றது. பெண் பூப்படைவதை கிராமப்புறங்களின் பெண் உட்கார்ந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள்.

தை மாதத்தில் அறுவடைக்குப் பின் அந்தக் கோடையில் மண் தக தகவென சிவப்பாக காட்சி அளிக்கும். அந்த நாட்களை பூமாதேவி உட்கார்ந்துவிட்டாள் என்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் விவசாயம் சார்ந்த எந்த வேலைகளும் நடக்காது. அதிலும் குறிப்பாக விவசாய நிலத்தில் வேலை செய்யும் மக்களே இச்சடங்கை நம்புகிறார்கள். நிலம் அவர்களுக்கான உடமையாக இல்லாத இக்காலத்திலும் இந்த மூன்று நாட்களும் நிலவுடமையாளர்கள் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை.

இக்கோவில்களில் தொடரும் வழிபாட்டின் எச்சங்களும் சில சடங்குகளும் மனித இன வரலாற்றில் பெண் வழிபாட்டின் மிச்சங்களே 

கருத்துகள் இல்லை: