ஞாயிறு, 30 ஜூன், 2013

வேதாளை கிளை-தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை சார்பாக 30-6-2013 அன்று பேருந்து நிலையம் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது , இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "தூய்மையான இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

M.R.பட்டிணம் கிளை- தெருமுனை பிரச்சாரம்



30-06-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம்,  M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக  தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்'' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அதில் நாங்கள் சொல்வது என்ன? நாங்கள் அழைப்பதற்கான காரணம் என்னவென்பதையும் விளக்கி கூறி மக்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் .

ராமேஸ்வரம் கிளை-இணைவப்புக்கு எதிராக தாவா





30.06.2013  காலை   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்  தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ஒரு வீட்டில் திஷ்டிக்காக  தேங்காய்,சங்கு கயிறுகளால் கட்டி தொங்கியதை கண்டுஅதன் தீமைகளை  விளக்கி அதை அறுத்து எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
  

சனி, 29 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை -உள்ளரங்கு பயான்


29.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் இம்ரான்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் 70 பேர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
Sent from my Windows Phone

ராமேஸ்வரம் கிளை -உள்ளரங்கு நிகழ்��்சி


29.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் இம்ரான்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் 70 பேர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
Sent from my Windows Phone

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


28.06.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக சுன்னத்வல் ஜமாஅத்(?)  பள்ளியின்  ஜூம்ஆவிற்கு பிறகு துஆக்கள் ஏற்கப்படும் அதிக வாய்ப்பு உள்ள நேரங்கள்  என்ற தலைப்பில் 150 துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

 

மாவட்ட மர்கஸ்க்கூதவிடுவீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதர,சாகோதரிகளே!அல்லாஹ்வுடைய மிகபெரும் கிருபைகொண்டு ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்க்கஸ் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது.28.06.2013 அன்று ROOF CONGIRATE போடப்பட்டுள்ளது.துரிதமாக கட்டிட வேலையை முடிப்பதற்கு உங்களுடைய பொருளாதாரத்தை கொடுத்து உதவும்மாறு ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:மாவட்ட தலைவர் சுலைமான்:9442860099.  
                         மவட்ட செயலாள்ர்.கலிபுல்லாஹ்:9842903008
                         மாவட்ட பொருளாளர்.சித்திக்:9600864242.
Email:rmdtntj@hotmail.com






நரிப்பையூர் கிளை-தெருமுனை பிரச்சாரம்

24.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக பராஅத் இரவின் தீமைகள் என்ற தலைப்பில் சகோதரர் முகம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நரிப்பையூர் கிளை- நபி வழி திருமணம்

28.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக  முகம்ம்து சரிபு அவர்களின் மகன் கலீல் ரஹ்மான் அவர்களுக்கு நபிவழித்திருமணம் நடைபெற்றது.இதில் மஹ்தூம் அவர்கள் எது நபிவழித்திருமணம்?என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

நரிப்பையூர் கிளை- நபி வழி திருமணம்

28.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக சகோதரர் முகம்ம்து சரிபு அவர்களின் மகன்மீராசா அவர்களுக்கு நபிவழித் திருமணம் நடைபெற்றது.இதில் சகோதரர் முகம்மது மஹ்தூம் அவர்கள் திருமணத்தின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

நரிப்பையூர் கிளை-கல்வி பரிசு வழங்குதல்

25.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக பத்தாம் வகுப்பில் முதல் மதிபெண் பெற்ற(462)பெற்ற சகோதரர் சுல்த்தான் அவர்களுடைய மகன் முகம்மது ஆசிப் என்ற மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நரிப்பையூர் கிளை-கல்வி பரிசுகள்

25.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிபெண் பெற்ற (1100) சாகுல் ஹமீத் அவர்களுடைய மகன் தாவூத் அலிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெரியபட்டிணத்தில் ஹைலண்ட் விளக்கு

பெரியபட்டிணத்தில் பஸ் நிலையம் அருகில் வெளிச்சம் கொடுக்கும் முகமாக அதிக அளவு பவருள்ள ஹைலண்ட் விளக்கு பொருத்த்ப்பட்டுள்ளது.இதன்மூலமாக பஸ் நிலையம் அருகில் இருட்டாக இருந்தது இப்பொழுது வெளிச்சம் கிடைப்பது உறுதி.

பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாயபணி

29.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பனைக்குளம் பஸ் நிலையம் அருகில் போடப்பட்ட வேகத்தடை இருப்பது மக்களுக்கு தெரியாத வண்ணம் இருந்தது.ஆதலால் பகலிலும்,இரவிலும் தொடர்ந்து அந்த வேகத்தடை மூலமாக  விபத்துக்கள் நடந்து கொண்டே இருந்தது.விபத்தினை தடுக்கும் பொருட்டு இரண்டு வேகத்தடைகள் தெரியும் முகமாக அதற்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது.


மங்களக்குடி கிளை-தெருமுனை பிரச்சாரம்

28.06.2013 அன்று மங்களக்குடி கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோதரர்.யாசிர் அவர்கள் தர்ஹா ஒரு வழிகேடே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு பயான்

28.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் குர்ஆன் பார்வையில் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் அர்சத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

வியாழன், 27 ஜூன், 2013

புதுவலசை கிளை-வாழ்வாதாரம்,கல்வி உதவி

27.06.2013 அன்று புதுவலசை கிளை சார்பாக வாழ்வாதார உதவி மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வாழ்வாதார உதவியாக ஆலிம் நிஷா,மர்ஜான் பேகம் இருவருக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.கல்வி உதவியாக ஜன்சீர் அலி அவர்களுக்கு B.TECH(IT)3rd year படிப்பதற்காக ரூபாய்.37,000 மற்றும் இப்ராகிம் என்பவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்க்காக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பனைக்குளம் தெற்கு கிளை-கல்வி உதவி

27.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக கல்லூரியில் பயிலும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 1வருடம் கல்வி கட்டணம் 13,000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


28.06.2013 ஜுமுஆ உரைகள்

இன்ஷா அல்லாஹ் ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.06.2013 அன்று ஜுமுஆ உரைகள்.

1.கீழக்கரை கிழக்கு-லக்கி அப்பாஸ்
2.கீழக்கரை தெற்கு-பக்கீர் முகம்மது
3.கீழக்கரை 500 பிளாட்-சுல்த்தான்
4.நத்தம்-அப்பாஸ்
5.சிக்கல்-ரஹ்மத்துல்லாஹ்
6.வாலிநோக்கம்-உஸ்மான்
7.முதுகுளத்தூர்-பசீர்
8.நரிப்பையூர்-மஹ்தூம்
9.தங்கச்சிமடம்-ஃபைசல்
10.மண்டபம்-அஜ்மல்கான்
11.மரைக்காயர்பட்டிணம்-அப்துல் ரஹ்மான்
12.இருமேனி-அப்துல் ஹக்கீம்
13.வேதாளை-அப்துல் ரஹீம்
14.புதுமடம்-ஜைனுல் ஆபிதீன்
15.தேவிபட்டிணம்-கான்
16.பனைக்குளம்-ரஹ்மான் அலி
17.புதுவலசை-ஜாஹிர் அலி
18.தொண்டி-யாசிர் அரபாத்
19.மங்களக்குடி-ஒயிசுல்தீன்
20.நம்புதாளை-நசிருதீன்
21.பரமக்குடி-செய்யது
22.பெரியபட்டிணம்-இஸ்மயீல்
23.ராமநாட் தக்வா -அர்சத் அலி
24.S.P.பட்டிணம்-அப்துல் காதர்
25.ராமேஸ்வரம்-ஹாஜா
26.மேலக்கோட்டை-பாசித்
27.சாயல்குடி-முகம்மது அலி
28.எமெனேஸ்வரம்-சீனி சிக்கந்தர்
29.மண்டபம் தக்வா-இம்ரான்கான்
30.பார்த்திபனூர்-முகம்ம்து சலீம்
31.கமுதி-ஜின்னா
32.சக்கரகோட்டை-காதர் முகைதீன்
33. வெளிப்பட்டிணம்-ஜிப்ரயீல்
34.பாம்பன்-அமீனுல்லாஹ்

M.ஜின்னா மாவட்ட துணைச்செயலாளர் 9600711631
Email:jinnah.tntj@gmail.com
website:www.ramnadtntj.com

பனைக்குளம் தெற்கு கிளை-மெகா ஃபோன் பிரச்சாரம்

27.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதர,சகோதரிகள் கேட்டு பயன்பெற்றனர்.

புதன், 26 ஜூன், 2013

வேதாளை கிளை-தாவா

26.06.2013 புதன்கிழமை அன்று வேதாளை கிளை சார்பாக ராமலிங்கம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நம்புதாளை கிளை-அறைகூவல்

23.06.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக பராஅத் இரவு  ஒன்று உண்டு என்று பிரச்சாரம் பண்ணின ஸபீலுல் உலமாவுக்கு பராஅத் இரவு இல்லையென்று ஒரே மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா என்று ஊரில் போர்டு மூலம் எழுதி அறை கூவல் விடுக்கப்பட்டது.

ரமளான் மாதத்தை அறிந்துகொள்வோம்.

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

"ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ (1898)

முஸ்லிம் (1956)

"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ (1899)

முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

"ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

"ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். "ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

"ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

"சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

"நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!


S.P.பட்டிணம் கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

24.06.2013 அன்று S.P.பட்டிணம் கிளை சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்பராஅத் இரவு இல்லையென்று ஹதீஸ்களிலும் அவர்கள் பின்பற்றுகின்ற மதஹபுகளிலும் இல்லையென்று ஆதாரத்துடன் சகோதரர்.அப்துல் காதர் அவர்கள் விளக்கி கூறினார்கள்.சகோதரர்கள் கலந்து பயன் பெற்றார்கள்.

S.P.பட்டிணம் கிளை-வால்போஸ்டெர்

24.06.2013 அன்று S.Pபட்டிணம் கிளை சார்பாக பராஅத் இரவுக்கு எதிராக ஊர் முழுதும் 100 வால்போஸ்டெர்கள் அடிச்சு ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

S.P.பட்டிணம் கிளை-வால்போஸ்டெர்

24.06.2013 அன்று S.Pபட்டிணம் கிளை சார்பாக பராஅத் இரவுக்கு எதிராக ஊர் முழுதும் 100 வால்போஸ்டெர்கள் அடிச்சு ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட-துண்டு பிரசுரம்

22.06.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பராஅத் இரவும் மத்ஹபுகளும் என்ற தலைப்பில் 5000 துண்டு பிரசுரம் அடிச்சு கிளைகளுக்கு வழங்கப்பட்டது.இதில் அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்த துண்டு பிரசுரத்தைக் படித்து பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 25 ஜூன், 2013

தொண்டி கிளை-உள்ளரங்கு

24.06.2013 அன்று தொண்டி கிளை சார்பாக ஷபாஅன் இரவு சம்பந்தமாக பயான் என்ற பெயரில் உளறிய இமாமிற்க்கு மறுப்பு தெரிவித்து பயான் நடைபெற்றது.இதில் யாஸிர் அரபாத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.இதில் ஒட்டுமொத்த ஆலிம்களுக்கும் ஷபாஅன் இரவுக்கு ஆதாரம் கேட்டு அறைககூவல் விடப்பட்டது.

தொண்டி கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

22.06.2013 அன்று தொண்டி கிளை சார்பாக மஹ்ரிபுக்கு பின்னர் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஷபாஅன் இரவு என்ற தலைப்பில் யாஸிர் அரபாத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

தொண்டி கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

23.06.2013 அன்று தொண்டி கிளை சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பராஅத்தும் இமாம்களின் வழிகேடும் என்ற தலைப்பில் யாஸிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

பனைக்குளம் தெற்கு கிளை-நபிவழித் திருமணம்

25.06.2013 செவ்வாய்க்கிழமை அசருக்கு பின்னர் சகோதரர் கமர்தீன் அவர்களின் புதல்வர் ஹில்ருதீன் அவர்களுக்கும்,சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்களுக்கும் நபிவழித் திருமணம் கமர்தீன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.இத்திருமணத்திற்கு ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

தொண்டி கிளை-விழிப்புணர்வு வாசகம்

21.06.2013 அன்று தொண்டி கிளை சார்பாக பராஅத் இரவு சம்பந்தமாக தெருக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

தொண்டி கிளை-மருத்தவ உதவி

21.06.2013 அன்று தொண்டி கிளை சார்பாக உருளைக்கல் பகுதியை சேர்ந்த ஒரு சகோதரியின் மகளுக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.4500 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

25.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக சுற்றுலா வந்திருந்த மதுரையை சேர்ந்த ராஜா என்பவருக்கு தாவா செய்யப்பட்டது.இதில் அவருக்கு மாமனிதர் முகம்மது(ஸல்)அவர்கள் புத்தகமும்,சீடியும் வழங்கப்பட்டது.

குருவாடி-பெண்கள் பயான்

23.06.2013 அன்று சாயல்குடி கிளை சார்பாக  குருவாடியில்பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இஸ்மயீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வெளிப்பட்டிணம் கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும்  திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி 22.06.2013  அன்று இரவு  6:30 மணிக்கு  பாரதிநகர் தவ்ஹீத் மர்கசில்  மாவட்ட தாயீ. சகோ. சலீம் அவர்கள் விளக்கவுரை தந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

வெளிப்பட்டிணம் கிளை-திருமணம் நிகழ்ச்சி

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை பாரதிநகர் தவ்ஹீத் மர்கசில் 22.06.2013  அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது.இதில் அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

 

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 23.06.2013  அன்று இரவு 7:00 மணியளவில் பாம்பூரணி ரோட்டில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ. லக்கி அப்பாஸ் அவர்கள் பராஅத் இரவும் மத்ஹப்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மத்ஹப் பள்ளியில் இமாமாக இருந்த பொழுது தானும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதை மேற்கோள் காட்டி தவ்ஹீதின் பக்கம் வாருங்கள் என்று இமாம்களை அழைத்தது அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தது. பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

பனைக்குளம் வடக்கு கிளை-துண்டு பிரசுரம்

24.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக ஊரில் உள்ள மக்களை சந்த்தித்து பராஅத் இரவு என்பது இஸ்லாத்தில் கிடையாது என்பதை விளக்கி கூறி அவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

24.06.2013  அன்று  பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பராஅத் இரவை கண்டித்து உள்ளரங்கு நிகழ்ச்சி மஹ்ருபுக்கு பின்னர் நடைபெற்றது.இதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

திங்கள், 24 ஜூன், 2013

நம்புதாளை கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

 24.06.2013 திங்கள் மாலை 5 மணியளவில் TNTJ நம்புதாளை கிளை மர்க்கஸ்ஸில் "நம்புதாளை உலமா சபை"வெளியிட்ட"பரக்கத் நிறைந்த பராஅத் இரவு"என்ற மார்க்கமல்லாத விசயங்களைக்கொண்ட பிரசுரத்திற்கு வரிக்கு வரி  யாஸிர் அரபாத்"அவர்கள்"குர்ஆன்,ஹதீஸ்"அடிப்படையில் பதில் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!