08.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஜோசப் ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலக்ஷ்மி என்ற சகோதரிக்கு A+ இரத்தம் 1யூனிட் கொடுக்கப்பட்டது.
செவ்வாய், 9 ஜூலை, 2013
பனைக்குளம் தெற்கு கிளை-அவசர இரத்த தானம்
08.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஜோசப் ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலக்ஷ்மி என்ற சகோதரிக்கு A+ இரத்தம் 1யூனிட் கொடுக்கப்பட்டது.
வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.07.2013 அன்று இரவு 7:00 மணியளவில் கான் சாகிபு நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ. லக்கி அப்பாஸ் அவர்கள் ரமலான் சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ரமலான் நகர்-நபிவழித் திருமணம்
03.07.2013 அன்று ரமலான் நகர் கிளை சார்பாக நபி வழித் திருமணம் நடைபெற்றது.இதில் சகோதரர் பக்கீர் முகம்மது அவர்கள் உரை நிகழ்த்தினாரகள்.
திங்கள், 8 ஜூலை, 2013
தொண்டி கிளை-உள்ளரங்கு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.07.13 அன்று தொண்டி தவ்ஹீத் மர்கசில் ரமலான் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும், நரகில் இருந்து காக்கும் நபிவழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தொண்டி கிளை-சமூக சேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 05.07.13 அன்று தொண்டியும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்துறையின் அவலத்தைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மின்துறையை கண்டித்து போராட்டம் அறிவித்து பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ராமேஸ்வரம் கிளை-பெண்களுக்கான மனனம் வகுப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 07.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான இரண்டாவது வார குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது.இதில் அதிகமான மாணவிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் நோன்பு சம்பந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள் மனன பாடமாக கொடுக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கிளை-நல்லொழுக்க பயிற்ச்சி
07.07.2013 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10:30 மணி முதல் 12:30மணி வரை மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி
கொடுக்கப்பட்டது .இப்பயிற்சியை சகோதரர் புதுவலசை யாசின் வழங்கினார்.அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்
நரிப்பையூர் கிளை-தெருமுனை பிரச்சாரம்
07.07.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கட்டுபடுதல் என்ற தலைப்பில் சகோதரர்.முகம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
கமுதி கிளை-தெருமுனை பிரச்சாரம்
தவ்ஹீத் ஜமாஅத் கமுதி கிளை சார்பாக 07.07.2013 அன்று மாலை, இரண்டு இடங்களில் தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மக்தூம் அவர்கள், "நிரந்தர நரகில்
சேர்க்கும் இணைவைத்தல்'' & '' வரதட்சணையின் கேடுகள்'' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மக்தூம் அவர்கள், "நிரந்தர நரகில்
சேர்க்கும் இணைவைத்தல்'' & '' வரதட்சணையின் கேடுகள்'' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
புதுவலசை கிளை-உள்ளரங்கு பயான்
06.07.2013 அன்று புதுவலசை கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் ரமளானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர்.
ஞாயிறு, 7 ஜூலை, 2013
நரிப்பையூர் கிளை-துண்டு பிரசுரம்
06.07.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக புகைபிடித்தலால் மனிதனுக்கு ஏற்படும் தீங்கை பற்றி விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்
07.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா ஆலிமா மற்றும் அஸ்மிதா பானு ஆலிமா அவ்ர்களும் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள் கலந்து கொண்டு ப்யன்பெற்றனர்.
மாவட்டம் சார்பாக-மாணவரணி நிகழ்ச்சி
07.07.2013 அன்று மாவட்ட சார்பாக மாணவரனி நிகழ்ச்சி ராமநாதபுரம் தக்வா மஸ்ஜிதில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் சகோதரர்.அமீனுல்லாஹ் அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,சகோதரர்.சுஜா அலி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான சகோதரர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பாம்பன் கிளை-தெருமுனை பிரச்சாரம்
06.07.2013 அன்று பாம்பன் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பிறை பார்ப்பது விசயத்தில் மக்களை போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் JAQH என்ற அமைப்பிற்க்கு பதில் கொடுக்கும் விதமாக தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.உரையாக:அர்சத் அலி அவர்கள் பிறை ஒரு விளக்கம் என்ற தலைப்பிலும்,சகோ.இம்ரான்கான் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் பணிகளும் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் இதன் மூலம் தெளிவு பெற்றனர்.
ராமேஸ்வரம் கிளை-ஃப்ளக்ஸ் தாவா
06.07.2013 இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையில் ரமலான் மாதத்தில் PJ அவர்கள் உரையாற்றும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் மெகா டிவியில் ரமலான் தொடர் நிகழ்ச்சியை மக்கள் பார்க்க 4 இடத்தில் 6x5 பிளக்ஸ் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















