அன்புள்ள சகோதர,சகோதரிகளே உங்களுடைய அந்தரங்க விஷயங்களை செல்போனிலோ அல்லது உங்களுடைய கேமாராக்களிலோ படம் பிடிக்காதிர்கள்.நீங்களே உங்களுக்கு நஷ்ட்டத்தை ஏற்ப்படுத்தி கொள்ளாதீர்கள்.ஏனெனில், நீங்கள் உங்கள் செல்போனில் எடுத்த அந்தரங்க காட்சிகளை பலபேர் பார்த்துமுடித்திருப்பார்கள்.அதிர்ச்சியாக இருகின்றதா அதுதான் உண்மை.நீங்கள் உங்கள் செல்போனில் எடுத்திருக்கும் காட்சிகளை அழித்திருக்கலாம்.ஆனால் அது அழியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய செல்போன் பழுதடையும்போது நீங்கள் பழுதுபார்க்க கொடுக்கும்பொழுதுதான் உங்களுக்கு பிரச்சனை ஆரம்ப்பமாகும்.எப்படியென்றால்,நீங்கள் பழுது பார்க்க கொடுக்கும் கடைகாரர் சபல புத்தி உள்ளவராக இருந்தால்.உங்களுடைய செல்போனில் எதையெல்லாம் நீங்கள் அழித்து உள்ளீர்கள் என்பதை அறிந்து.அழித்ததை எல்லாவற்றையும் திரும்ப எடுத்து விடுவார்.அழித்ததை திரும்ப எடுக்க பயன்படும் சாப்ட்வேர்தான் 'ரீக்கவரி சாப்ட்வேர்'.இந்த சாப்ட்வேர் மூலமாக உங்கள் செல்போனில் எதையெல்லாம் நீங்கள் அழித்துவிட்டீர்களோ அதையெல்லாம் திரும்ப எடுத்துவிடலாம்.அவர்கள் அந்த காட்சிகளை எடுத்து மேலை நாட்டிற்க்கு விற்றுவிடுவார் உங்கள் மானம் கப்பலேறிவிடும்.கடைகாரருக்கு உங்கள் மொபைல் மூலமும் வருமானம்,அந்தரங்க காட்சி மூலமும் வருமானம்.ஆகையால் அல்லாஹ்வுக்கு பயந்து நம்முடைய அந்தரங்க காட்சிகளை படம் பிடிக்காமல் இருப்போம்.அப்படியே நாம் பிடித்திருந்தால்மொபைல் பழுதடைந்தால் அதை கடைகாரரிடம் கொடுக்காமல் செல்போனை உடைத்து விட வேண்டியதுதான்.
மி.ஜின்னா
பெரியபட்டிணம்.
M.Jinnah periyapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக