புதன், 3 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாய உதவி




02.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஏழ்மையான நிலையிலுள்ள ஒரு குடும்ப சகோதரிக்கு குடும்ப பிரச்சனை காரணமாக மனு கொடுத்திருந்தார்கள்.அந்த மனுவை பார்வையிட்டு அவர்களுக்கு சட்டம் சம்பந்த பட்ட உதவி மற்றும்போலிஸ் உதவி செய்யப்பட்டது.


செவ்வாய், 2 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-மதர்ஸா ஆரம்பம்






தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 02.07.2013 அன்று
முதல் பெண்களுக்கு தனி இடத்தில் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை சொல்வதற்க்கு மதர்ஸாஆரம்பிக்கப்பட்டது.அதில் 26 பெண்கள் கலந்துகொண்டனர். இன்ஷாஅல்லாஹ் இந்த  வகுப்பு இனிமேல்  வாரந்தோரும் ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும்.அல்ஹம்துலில்லாஹ்.

இஃதிகாப் பற்றி அறிந்துகொள்வோம்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)

நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?" என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)

"நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)

நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)

தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.

பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

திங்கள், 1 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-தொழுகை பயிற்ச்சி

   
01.07.2013 திங்கள்கிழமை  அன்று  மாலை  5.00 மணி  முதல் 6.30 மணி  வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக மாணவர்களுக்கு நபிவழி தொழுகை பயிற்சி  நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் TNTJ ராமேஸ்வரம் கிளையின்  மாணவர் அணி செயலாளர்  சலாஹுத்தீன் பயிற்சி அளித்தார்.மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 
 
 

S.P.பட்டிணம் கிளை-சமூகப்பணி




30.06.2013 அன்று S.P.பட்டிணம் கிளை சார்பாக தொண்டி மின் வாரியத்தின் மெத்தன போக்கை கண்டித்து  100வால்போஸ்டெர்  ஒட்டப்பட்டது.

S.P.பட்டிணம் கிளை-பிறமத தாவா




30.06.2013 அன்று S.P.பட்டிணம் கிளை சார்பாக கண்ணதாசன் என்ற பிறமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் முகம்மது (ஸல்)அவர்கள் புத்தகமும் வழங்கப்பட்டது.

S.P.பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்





28.06.2013 அன்று S.P.பட்டிணம் கிளை சார்பாக மஹ்ரிபுக்கு பின்னர் உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அப்துல் காதர் உஸ்மானி உரை நிகழ்த்தினார்கள்.

மச்சூர் கிளை-உள்ளரங்கு பயான்




30.06.2013 அன்று மச்சூர் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்



30.06.2013  அன்று பனைக்குளம் தெற்கு  சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஹமீதா ரைஹானா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.


பனைக்குளம் தெற்கு கிளை-பேணர்




30.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அர்ரஹ்மான் இல்லம்,அர்ரஹீம்,அல்-ஹிதாயா அழைப்பு மையம்,ஆகியவற்றிக்கு பொருளாதாரம் திரட்டுவதற்காக வாரீ வழங்குவீர் என்ற வாசகத்துடன் மர்க்கஸ் வாசலில் பேணர் வைக்கப்பட்டுள்ளது.



வெளிப்பட்டிணம் கிளை-இலவச கத்னா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது இக்பால் என்ற சகோதரருக்கு கத்னா செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

வெளிப்பட்டிணம் கிளை-தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 அன்று இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புதுமைகளும் அவைகள் நம்மை சொர்க்கத்தை விட்டு தூரமாக்குவதையும் எடுத்துக்கூறி இக்பால் என்ற சகோதரரின் கையில் இருந்து கருப்பு கயிறு அறுத்தெறியப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று மாலை 7:00 மணியளவில் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரை தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில தாயீ சகோ. அர்ஷத் அலி MISC  அவர்கள் ரமலான் சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்துக்களை போதித்து கடைபிடித்து வரும் உலமாக்களுக்கு விவாதத்திற்கான பகிரங்க அறைகூவல் விடுக்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 அன்று மாலை 7:  வெளிப்பட்டிணம் ஹாஜிமார் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயி செய்யது அவர்கள் ரமலானும், நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

மண்டபம் கிளை-தெருமுனை பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பாக 30-06-2013 அன்று தண்டையல் தெரு , தக்வா பள்ளி  அருகில் மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  



இதில் மாவட்ட  பேச்சாளர் சகோ.அஜ்மல்  அவர்கள் "முஸ்லிம்களின் ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட  பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் , மற்றும் கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை  ஆற்றினர்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்