புதன், 8 ஆகஸ்ட், 2012

முலிம்களே இதை சிந்தனை செய்யுங்கள்!

அஸ்ஸாலாமு அலைக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:மகத்துவமிக்க இரவில் இதை(குரானை)நாம் இறக்கினோம்.
மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
வானவர்களும்,ரூஹூம் அதில் தமது இறவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடன் இறங்குகின்றனர்.
ஸலாம்!இது வைகறை வரை இருக்கும்.
அல்-குரான்:97:1,2,3,4,5.
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே இந்த இரவில் அல்லாஹ்யுடைய தூதர் அவர்கள் அதிகமான நல்ல அமல்கள் செய்துள்ளார்கள்.இந்த இரவில் நாம் செய்கின்ற நல்ல அமல்களுக்கு அல்லாஹு ரம்புல் ஆலமீன் அதிகமான நன்மைகளை தருகிறான்.இந்த வசனத்தில் இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என கூறுகின்றான்.இந்த இரவில் ஒரு முஸ்லிம் செய்கின்ற நல்ல அமல்களுக்கு என்ன கூழி தெரியுமா?நீங்கள் என்ன நல்ல காரியம் செய்தாலும் அந்த காரியம் ஆயிரம் மாதங்களை விட செய்தால் என்ன நன்மையோ அந்த நன்மையை அல்லாஹ் தருகின்றான்.ஒரு மனிதன் குரானில் அல்-பகரா அத்தியாயத்தை ஓதுகிறார் யென்றால் இந்த இரவில்,ஆயிரம் மாதங்களுக்கு மேல் ஓதினால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையை இந்த இரவில் தருகின்றான்.நாம் நூறு வருடம் வாழ்ந்தாலும் நாம் இந்த நன்மையை அடையமுடியாது என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள்.ஆகையால் இந்த இரவில் நல்ல அமல்களை செய்வோம்.நல்ல முஸ்லிம்களாக அல்லாஹ் வாழசெய்வானாக.

கருத்துகள் இல்லை: