ஞாயிறு, 7 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்



06.07.2013 சனிக்கிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாராந்திர பயான் நிகழ்ச்சியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி  மார்க்க சந்தேகங்களுக்கு  பதில் அளித்தார்கள்.இதில் ஆண்கள், பெண்கள் உட்பட  55 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 6 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


05.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக சுன்னத்வல் ஜாமாத்(?)  பள்ளியின்  ஜூம்ஆவிற்கு பிறகு அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் என்ற தலைப்பில் 100 பிட் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மண்டபம் கிளை -பெண்கள் பயான்

05.07.2013 அன்று மண்டபம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் .


புதுமடம் கிளையி��் இஸ்லாத்தில் இ��ைந்தவர்.

06.07.2013 அன்று புதுமடம் கிளை சார்பாக பூபதி என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .அவருக்கு ஏகத்துவ கலிமாவை மாவட்ட    தலைமையகத்தில் வைத்து புதுமடம் இமாம் அவர்கள் சொல்லிகொடுத்தார்கள் மற்றும் அவருக்கு முகமது  சாதிக் என்று பெயர் வைக்கப்பட்டது .மேலும் அவருக்கு மாவட்ட சார்பாக குரான் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் மாவட்ட துணை செயலாளர் ஜின்னா அவர்கள் வழங்கினார்கள்.

R.S.மங்களம் கிளை-தாவா

04.07.2013 அன்று R.S.மங்களம் கிளை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் சந்தா தாரர்களுக்கு ரமலானின் சிறப்புகள் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது.

R.S.மங்களம் கிளை-புதிய ஜுமுஆ

வெள்ளி, 5 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உதவிகள்




04.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக அர்ரஹ்மான் சிறுமியர் இல்லத்திற்கு,இரண்டு சிறுமியருக்கு உண்டான் செலவு ரூபாய் 13,000 மற்றும் அல்-ஹிதாயா பெண்கள் அழைப்பு மையத்திற்க்கு ரூபாய் 8,500 சேர்த்து மொத்தம் 21,000 ரூபாய் மாவட்ட PRO ஃபைசலிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 4 ஜூலை, 2013

05.07.2013 ஜுமுஆ உரைகள்

இன்ஷா அல்லாஹ் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 05.07.2013 அன்று ஜுமுஆ உரைகள்.

1.கீழக்கரை கிழக்கு-பக்கீர் முகம்மது
2.கீழக்கரை-தெற்கு-அமீனுல்லாஹ்
3.கீழக்கரை 500 பிளாட்-அப்பாஸ்
4.நத்தம்-ரஹ்மான் அலி
5.சிக்கல்-நசிருதீன்
6.வாலிநோக்கம்-ஜிப்ரயீல்
7.நரிப்பையூர்-சுலைமான்
8.முதுகுளத்தூர்-பஸீர்
9.தங்கச்சிமடம்-ஹாஜா
10.மண்டபம்-ஃபைசல்
11.மரைக்காயர்பட்டிணம்-அப்துல் ரஹீம்
12.இருமேனி-அப்துல் ஹக்கீம்
13.வேதாளை-சித்திக்
14.புதுமடம்-இஸ்மயீல்
15.தேவிபட்டிணம்-செய்யது
16.பனைக்குளம்-அப்துல் ரஹ்மான்
17.புதுவலசை-கான்
18.தொண்டி-ராஜ் முகம்மது
19.மங்களக்குடி-அப்துல் காதர்
20.நம்புதாளை-யாசிர்
21.பரமக்குடி-சிராஜுதீன்
22.பெரியபட்டிணம்-அஜ்மல்கான்
23.ராம்நாட் தக்வா-ஹனிஃப்
24.S.P.பட்டிணம்-ஹபீப்
25.ராமேஸ்வரம்-காதர் முகைதீன்
26.மேலக்கோட்டை-சத்தார்
27.சாயல்குடி-முகம்மது அலி
28.எமெனேஸ்வரம்-பாசித்
29.மண்டபம் தக்வா-இக்ரமுல்லாஹ்
30.பார்த்திபனூர்-ஜாகிர் ஹுஸைன்
31.கமுதி-ரஹ்மத்துல்லாஹ்
32.சக்கரகோட்டை-லக்கி அப்பாஸ்
33.வெளிப்பட்டிணம்-இம்ரான்கான்
34.பாம்பன்-முகம்மது சலீம்
35.புதிய ஜுமுஆ:R.S.மங்களம்(அல்ஹம்துலில்லாஹ்)-K.ஜைனுல் ஆபீதீன்

M.ஜின்னா மாவட்ட துணைச்செயலாளர்
Email:rmdtntj@hotmail.com
visit:www.ramnadtntj.com

வெளிப்பட்டிணம் கிளை-பகிரங்க அரைகூவல்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று கத்தம், பாத்திஹா, மவ்லீது, முரீது, தகடு தாயத்து, மீலாது விழா போன்ற பித்அத்துக்களை கடைபிடிக்க வேண்டும் என்று] மார்க்கம் பேசி வரும் இமாம்கள் மத்தியில் நபிவழியில் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க கோரி நகர் முழுவதும் 200 சுவரொட்டிகள் [Wall Posters] ஒட்டப்பட்டது.  


 

இப்படிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டினம் கிளை.

 

மார்க்க மற்றும் சமுதாய செய்திகளை அதன் தூய வடியில் அறிந்து கொள்ள www.onlinepj.com; www.tamilquran.in; www.jesusinvites.com; www.thowheedvideo.com; மற்றும்www.tntj.net ஆகிய இணையதளத்தில் காணலாம்.

வெளிப்பட்டிணம் கிளை-துண்டுபிரசுரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 29.06.2013 அன்று கத்தம், பாத்திஹா, மவ்லீது, முரீது, தகடு தாயத்து, மீலாது விழா போன்ற பித்அத்துக்களை கடைபிடிக்க வேண்டும் என்று] மார்க்கம் பேசி வரும் இமாம்கள் மத்தியில் நபிவழியில் மக்கள் மன்றத்தில் [நேரடி விவாத அழைப்பு] நிரூபிக்க கோரி நகர் முழுவதும் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

ராமேஸ்வரம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா



04.07.2013  அன்று காலை   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்  தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ஒரு கடையில்  திஷ்டிக்காக  லாடம் மாட்டி இருந்ததை கண்டுஅதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலக்கோட்டை கிளை-பெண்கள் பயான்




Sent from my iPhone



30.06.2013 அன்று மேலக்கோட்டை கிளை சார்பாக பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அஸ்மிதா பானு ஆலிமா அவர்கள்  இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

புதன், 3 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-துண்டு பிரசுரம்




03.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாயப்பணி



03.07.2013 அன்று மர்க்கஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரோட்டில் மணல்கள் குவிந்து வாகனங்களில் வரும் மக்கள் விபத்துக்குள்ளாகின்றார்கள்.ஆதலால் விபத்தை தடுக்கும் வண்ணம் ரோட்டில் உள்ள மணல்களை அள்ளி பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

பனைக்குளம் தெற்கு கிளை-புகைபிடித்தல்&மதுவின் தீமைகளை விளக்கி பேணர்




02.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பஸ்நிலையம் அருகில் புகைபிடித்தல் மற்றும் மது ஆகியவற்றின் தீமைகளை விளக்கி பேணர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.