திங்கள், 18 நவம்பர், 2013

பெரியபட்டிணம் கிளை புதிய நிர்வாகிகள்

பெரியபட்டிணம் கிளை சார்பாக 1.11.2013 அன்று கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1.தலைவர்:செய்யதலி-8148168968
2.செயலாளர்:முகம்மது ரஃபீக்-7200290697
3.பொருளாளர்:இஸ்மயீல்-9786651456
4.துணைத் தலைவர்-ஆசாத்-8148534394
5.தொண்டரணி-காசிப்-8148169049
6.மாணவரணி-இப்ராகிம்-8015029661
7.மருத்துவரணி-சதாம் ஹுஸைன்-7418325928

புதுமடம் கிளை-திருக்குர்ஆன் விளக்கவுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக 17/11/2013 இன்று மஹ்ரிபிர்க்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது.இதில் சகோ. அமினுல்லாஹ் உரையாற்றினார்கள்.
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்... அல்ஹம்துலில்லாஹ்..!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கீழக்கரை தெற்கு கிளை-பொருளாதார உதவி

கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 17.11.2013 அன்று ஏழ்மையான சகோதரி ஒருவருக்கு ரூபாய் 2000.00 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பாலைக்குடி கிளை-பெண்கள் பயான்

திருப்பாலைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  17.11.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் உரையாற்றினார்கள் ஆண்களும் பெண்களும்  80 நபர்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்..

தேவிப்பட்டிணம் கிளை-தெருமுனைப் பிரச்சாரம்

தேவிப்பட்டிணம் கிளை சார்பாக 17.11.2013 அன்று சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அர்சத் அலி மற்றும் பக்கீர் முகம்மது அவர்களும் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆற்றாங்கரை கிளை-பெண்கள் பயான்

ஆற்றாங்கரை கிளை சார்பாக 17.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

  
16.11.2013 சனிகிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் இஸ்மாயில் அல்தாபி அவர்கள் இறைவனின் கருணையும் கோபமும் என்ற தலைப்பில்   உரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

பனைக்குளம் தெற்கு கிளை-அவசர இரத்த தானம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    15-11-2013 அன்று இரவு 9 மணிக்கு  கனகமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  மாற்று மத ஏழை சகோதரர் ஒருவருக்கு       AB-(negative) ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


வெள்ளி, 15 நவம்பர், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-உள்ளரங்கு பயான்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 12.11.2013அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் அபூபக்கர் என்ற சகோதரர் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


வியாழன், 14 நவம்பர், 2013

சக்கரகோட்டை கிளை-பெண்கள் பயான்

சக்கரகோட்டை கிளை சார்பாக 10.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி ருபினா அவர்கள் உரையாற்றினார்கள்.50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பனைக்குளம் தெற்கு கிளை-தாயத்து அகற்றுதல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    12-11-13 அன்று ஒரு சகோதரருக்கு தாயத்து அணிவதின் தீங்கை எடுத்து கூறி அவர் அணிந்திருந்த தாயத்து கழற்றி எறியப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்         

பனைக்குளம் தெற்கு கிளை-சுவர் விளம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    13-10-2013 அன்று "சிறை செல்லும் போராட்டம் " சம்பந்தமாக 11 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ். 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

காணவில்லை!காணவில்லை!

 மேற்க்கண்ட புகைபடத்திலுள்ள வாலிநோக்கத்தைச் சேர்ந்த ரூஹுல்லாஹ் அவர்களின் மகன் முகம்மது உதைபா (வயது 14. படிப்பு 9 ம் வகுப்பு
)என்ற பையனை 21.10.2013 முதல் சாயல்குடி பஸ்நிலையத்திலிருந்து காணவில்லை.இவரை பற்றி தகவல் அறிந்தால்.இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்:9894123210.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மாவட்டம்-இஸ்லாமிய புத்தக ஸ்டால்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 05.10.2013 அன்று புதிய பஸ் நிலையம் அருகில் இலவச இஸ்லாமிய புத்தக ஸ்டால் போடப்பட்டது.இதில் இஸ்லாம் அல்லாத சகோதர,சகோதரிகளுக்கு புத்தகங்கள் மற்றும் CD-க்கள் துண்டு பிரசுரம் இலவசமாக கொடுக்கப்பட்டது.
இந்துக்களுக்கும் கிருஸ்த்துவர்களுக்கும் தனித்தனியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட துணைச்செயலாளர் யாசிர் அரபாத் அவர்கள் தெளிவாக விளக்கமளித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இந்த புத்தக ஸ்டால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சந்தோசப்பட்டு கூறிவிட்டு சென்றார்கள்.இதில் மாமனிதர் முகம்மத (ஸல்)அவர்கள் புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட பொருளாளர் சித்திக்,மாவட்ட துணைத் தலைவர் நசிருதீன்,மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட தொண்டரணி செயலாளர் லுக்மான் அவர்கள் தொண்டர்களை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


1.அர்த்தமுள்ள இஸ்லாம்-30
2.மாமனிதர் 50
3.குற்றச் சாட்டுகளும் பதில்களும்-30
4.இயேசு இறை மகனா-30
5.இதுதான் பைபிள்-30
6.சத்ய மார்க்கம்-30
7.மனிதனுக்கேற்ற மார்க்கம்-30
8.வருமுன் உரைத்த இஸ்லாம்-30
9.இயேசு சிலுவையில் அரையப்படவில்லை-30.
10.பைபிளில் முகம்மது(ஸல்)அவர்கள்-30
11.அற்புத விழாக்களில் நடப்பெதன்ன-25
12.என்னை கவர்ந்த இஸ்லாம்-100 
13.கர்த்தரின் அறிவுரைகள்-1000
14.யார் இவர்-1000
15.இஸ்லாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்-1000
போன்றவைகள் புத்தக ஸ்டாலி கொடுக்கப்பட்டன்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மண்டபம் கிளை-தையல் மிஷின் உதவி

மண்டபம் கிளை சார்பாக 25.09.2013 ஜகாத் நிதியிலிருந்து பர்வின் என்பவருக்கு ரூபாய் 6000.00 மதிப்புள்ள தையல் மிசின் வழங்கப்பட்டது.